நல்லா பாருங்க அகர்கர்.. இதை செய்ற ஷமியால் இந்தியாவுக்காக விளையாட முடியாதா? கங்குலி பேட்டி

Sourav Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் விட முயற்சித்து வருகிறார்கள். 2023 உலகக்கோப்பையில் லேசான காயத்துடன் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் பின் காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவரால் கடந்த 2024/25 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரை விளையாட முடியவில்லை.

இறுதியில் ஒன்றரை வருடம் கழித்து குணமடைந்த ஷமி உள்ளூரில் சிறப்பாக விளையாடி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தேர்வானார். அந்த வாய்ப்பில் 8 விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். ஆனால் அப்போதிலிருந்து ஷமி ஃபிட்டாக இல்லையென்று சொல்லி தேர்வுக்குழு தொடர்ச்சியாக கழற்றி விட்டு வருகிறது.

- Advertisement -

போராடும் ஷமி:

அதற்காக அசராத அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தனது ஃபிட்னஸை நிரூபித்தார். மேலும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட முடிகின்ற தம்மால் இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட முடியாதா? என்று அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒருவேளை ஷமி ஃபிட்டாக இருந்திருந்தால் இந்நேரம் ஆஸ்திரேலியா சென்ற இந்திய ஒருநாள் அணியின் விமானத்தில் இருந்திருப்பார் என்று அகர்கர் தெரிவித்தார்.

அதே சமயம் அடுத்து நடைபெறும் உள்ளூர் தொடர்களில் அசத்தும் பட்சத்தில் கதை மாறலாம் என்றும் அகர்கர் கூறியிருந்தார். அந்த நிலையில் 2025 சயீத் முஸ்டாக் அலி டி20 கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடிய ஷமி 16 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். குறிப்பாக கடைசி 3 போட்டிகளில் மட்டும் 11 விக்கெட்டுகளை அள்ளிய அவர் தன்னுடைய ஃபிட்னஸ், ஃபார்ம், தரம் ஆகிய அனைத்தையும் மீண்டும் நிரூபித்து காண்பித்துள்ளார்.

- Advertisement -

நல்லா பாருங்க அகர்கர்:

இந்நிலையில் உள்ளூரில் ஃபிட்னஸை நிரூபித்து அசத்துகின்ற ஷமியால் இந்தியாவுக்காக விளையாட முடியாதா? என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார். எனவே அவரை தேர்வுக்குழு தலைவர் அகர்கர் பார்க்க வேண்டுமென தெரிவிக்கும் கங்குலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “தேர்வாளர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”

இதையும் படிங்க: டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிடின் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித் – விவரம் இதோ

“ஷமி மற்றும் தேர்வாளர்கள் இடையே தொடர்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் என்னிடம் நீங்கள் கேட்டால் ஃபிட்னஸ் மற்றும் திறன் அடிப்படையில் ஷமி பற்றி நமக்குத் தெரியும். எனவே டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் அவரால் விளையாட முடியாது என்று சொல்வதற்கான எந்த காரணத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. ஏனெனில் அவருடைய திறன் மகத்தானதாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement