- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஷமி, சிராஜ் மாதிரி 140கி.மீ வேகத்தில் வீசுவாரு.. அந்த பையன் பவுலிங்கை பார்க்க காத்திருக்கேன்.. கங்குலி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற சீனியர் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் அவரை தேர்ந்தெடுக்காத தேர்வுக்குழு ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் ஆகிய புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அதில் ஆகாஷ் தீப் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இந்தியாவுக்காக அறிமுகமானார்.

- Advertisement -

ஷமி, சிராஜ் போல:

குறிப்பாக ராஞ்சியில் நடைபெற்ற 4வது போட்டியில் அறிமுகமான அவர் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஓலி போப் ஆகிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து 2024 துலீப் கோப்பை. முதல் ரவுண்டில் அசத்தலாக பந்து வீசிய ஆகாஷ் தீப் 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தங்களுடைய மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் தீப் இந்திய பவுலர்கள் ஷமி, முகமது சிராஜ் போலவே பந்து வீசும் திறமையைப் பெற்றுள்ளதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பாராட்டியுள்ளார். எனவே வங்கதேச தொடரில் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் அவர் பந்து வீசி அசத்துவார் என்று கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்தியா வெல்லும்:

“ஆகாஷ் தீப் மிகச் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர். மிகவும் வேகமாக ஓடக்கூடிய அவரால் நீண்ட நேரம் பந்து வீச முடியும். ஃபிட்டாக இருக்கும் அவர் பெங்கால் அணிக்காக நீண்ட காலம் விளையாடி விக்கெட்டுகள் எடுத்துள்ளதை நான் பார்த்துள்ளேன். ஷமி, சிராஜ் போலவே அவரால் 140 கிலோமீட்டர் உச்ச வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீச முடியும். அவர் இந்த தொடரில் நாம் பார்க்க வேண்டிய ஒரு பவுலர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து ஒரு அணியின் உரிமையாளராக மாறிய சஞ்சு சாம்சன் – என்ன அணி தெரியுமா?

மேலும் பாகிஸ்தானை தோற்கடித்த தன்னம்பிக்கையுடன் வரும் வங்கதேசம் இந்திய அணிக்கு சவால் கொடுக்கும் என்று கங்குலி கூறினார். ஆனால் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் தொடரை வெல்லாதும் என்றும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். முன்னதாக பெங்கால் அணிக்காக இதுவரை 32 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள ஆகாஷ் தீப் 116 விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -