இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த 2015 ஆம் ஆண்டே டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாக இருந்தாலும் மிகப்பெரிய இடைவெளிக்கு பின்னர் தான் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் முன்னரே அவர் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும் இதுவரை 46 சர்வதேச போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
உரிமையாளரான சஞ்சு சாம்சன் :
அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளில் 30 போட்டியிலும், ஒருநாள் வடிவத்தில் பதினாறு போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். இன்னும் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்காக அவர் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக காத்திருக்கிறார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு முதலில் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் இதுவரை 168 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதுமட்டும் இன்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். அவரது திறமைக்கு ஏற்ப அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் இந்திய அணியில் கொடுக்கப்படவில்லை என முன்னாள் வீரர்கள் பலரும் ஆதங்கம் தெரிவித்து வந்தனர்.
கடைசியாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடரின் போது கூட சதம் அடித்த அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து சஞ்சு சாம்சன் ஒரு அணியை விலைக்கு வாங்கி புதிய உரிமையாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
அந்த வகையில் கேரளாவில் நடைபெற்று வரும் கேரளா சூப்பர் லீக் கால்பந்து தொடரின் மலப்புரம் எப் சி என்கிற அணியில் உரிமையாளராக அவர் தற்போது ஒரு பங்கை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : தோனியை அவுட்டாக்க கோலி தான் இந்த பிளான் கொடுத்தாரு.. இந்தியாவுக்காக இதை செய்வேன்.. யாஷ் தயாள்
கிரிக்கெட்டுக்கு அடுத்து சஞ்சு சாம்சனுக்கு பிடித்த விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். எப்போதுமே அவர் கால்பந்து மீது தனி பிரியம் கொண்டவர். இந்நிலையில் தற்போது அதனை வெளிப்படுத்தும் விதமாகவே அந்த அணியை அவர் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



