அட்லீஸ்ட் வெளிநாட்டு டெஸ்டில் விளையாட அவர பேசி சம்மதிக்க வெய்ங்க – டிராவிட், ரோஹித்துக்கு கங்குலி ஓப்பன் கோரிக்கை

Sourav Ganguly 5
- Advertisement -

கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கொஞ்சம் கூட போராடாமல் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு அஸ்வினை தேர்ந்தெடுக்காததுடன் சுமாரான பேட்டிங், பவுலிங் போன்ற பல்வேறு அம்சங்கள் முக்கிய காரணமாக அமைந்த நிலையில் தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக இருந்தது.

ஏனெனில் பொதுவாகவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மைதானங்கள் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் 3 முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் 4வது பவுலர் பேட்டிங் ஆல் ரவுண்டராக இருந்தால் மட்டுமே வெற்றிக்கு போராட முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் ஒரு தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இதுவரை இந்தியாவுக்கு கிடைக்காதது வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சாதிப்பதற்கு பெரிய தடையாக இருந்து வருகிறது.

- Advertisement -

கங்குலி கோரிக்கை:
இருப்பினும் அதற்கு தீர்வாக 2016இல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்திய ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்று விமர்சித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் கருத்தை 2018 நாட்டிங்கம் டெஸ்டில் 5 விக்கெட் ஹால் எடுத்து பொய்யாக்கினார். அதனால் கபில் தேவ் இடத்தை நிரப்ப ஒருவர் வந்து விட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் 2019 உலகக்கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் தடுமாறிய பாண்டியா 2021 டி20 உலக கோப்பையில் நீக்கப்பட்டார்.

ஆனாலும் 2022 ஐபிஎல் தொடரை கேப்டனாக வென்று கம்பேக் கொடுத்த அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் அடுத்த கேப்டனாகும் அளவுக்கு முன்னேறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. மேலும் இந்தியாவின் நலனுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுங்கள் என்று ரிக்கி பாண்டிங், கபில் தேவ் ஜாம்பவான்கள் கேட்டுக்கொண்டும் அதற்கான எந்த முயற்சிகளையும் பயிற்சிகளையும் அவர் எடுக்காமலேயே இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஹர்திக் பாண்டியா அவசியம் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். எனவே குறைந்தபட்சம் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பாண்டியாவை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் பேசி சம்மதிக்க வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: அவர தவிர உலகில் வேறு யாராலும் எங்கள தோற்கடிச்சுருக்க முடியாது, அவரை சாய்க்க ஸ்பெஷல் ப்ளான் போடனும் – சடாப் கான் பாராட்டு

“கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோர் ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு பேசி சம்மதிக்க வைக்க வேண்டுமென்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அவருடைய பவுலிங் இந்திய மண்ணில் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் பவுலிங் செய்வது இந்திய அணியை சமநிலைப்படுத்தும். எனவே வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் நிச்சயம் விளையாடி குறைந்தது ஒரு நாளைக்கு 10 ஓவர்கள் வீச வேண்டும். அவர் இந்தியாவுக்கு மிகவும் அவசியமான முக்கியமான வீரர்” என்று கூறினார்.

Advertisement