இந்தியா மற்றும் மே.இ தீவுகளுக்கு இடையேயான தொடரை ஸ்டார் ஸ்பார்ட்ஸ் சேனலில் பார்க்க முடியாது – ஒளிபரப்பு உரிமையை வாங்கிய பிரபல சேனல்

Star-sports
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அமெரிக்கா பறந்தது குறிப்பிடத்தக்கது.

Jadeja

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெறும் இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை தற்போது சோனி நிறுவனம் வாங்கியுள்ளதால் அந்த சேனலே இந்த தொடரை ஒளிபரப்ப உள்ளது. வழக்கமாக போட்டிகளை ஒளிபரப்ப வந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்- ல் இந்த போட்டிகளை காண முடியாது.

Sony

சோனி டென் 1 என்ற சேனலில் இந்த தொடரை ஆங்கில வர்ணனையில், சோனி டென் 3 என்று சேனலில் இந்த தொடரை ஹிந்தி வர்ணனையிலும் பார்த்து மகிழலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement