6000 கோடி விலை.. ! 17 சேனல்களில் ஒளிபரப்பு.. ! 22% உயர்ந்த ரசிகர்கள்..! ஐ.பி.எல் சாதனைக்கு காரணம் யார் தெரியமா..?

staripl
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி20 தொடராக கருதப்படுகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி உலகம் முழுவதும் இந்த தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 11 வருடங்களாக நடந்து வரும் இந்த தொடர், இந்த ஆண்டு ஸ்டார் குழுமத்தின் வருகையால் சற்று மேலும் பிரபலமடைந்தது என்றும் கூறலாம்.

starsport

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமத்தை சோனி தொலைக்காட்சி நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால், இந்த வருடம் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் தொலைக்காட்சி குழுமம் 6000 கோடி ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கியது. ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை மட்டுமல்லாமல் இந்தியாவில் நடக்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தையும் ஸ்டார் குழுமம் தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடைபெற்று முடிந்த கடந்த சில ஐபிஎல் தொடர்களை விட இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை கண்டுகளித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 22 சதவிதம் அதிகறித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமே ஸ்டார் குழுமம் தான். ஏனெனில் ஸ்டார் குழுமம் உலகெங்கும் பல கிளைகளை கொண்ட ஒரு மிகப்பெரிய நிறுவனம். மேலும், கிட்டத்தட்ட 17 திரைகளில் விளையாட்டு போட்டிகளை நேரலை செய்து சாதனையும் படைத்துள்ளது.

iplstar

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற ஸ்டார் குழுமம், ஐபிஎல் தொடரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. இதுவரை ஹிந்தி, ஆங்கிலம் என்ற வர்ணனையில் மட்டும் இருந்து ஐபிஎல் தொடரை, இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி, ஆங்கிலம் என்று 7 பிராந்திய மொழிகளில் நேரலை செய்து அசத்தியது. இதனால் ஐபிஎல் போட்டிகளின் பார்வையாளர்களை அதிகரிக்க செய்தது ஸ்டார் குழுமம். மேலும், இந்தியாவில் நடைபெறும் இனி வரும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் இந்திய பிராந்திய மொழிகளில் நேரலை செய்யாப்பட்டாலும் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

Advertisement