ஒரு போட்டியில் கூட விளையாடானாலும் கொரோனா நிதியை வாரி வழங்கிய சி.எஸ்.கே வீரர் – சோனு சூட் புகழாரம்

Sonu

பிரபல பாலிவுட் வில்லன் நடிகரான சோனு சூட் கொரோனா காலத்தில் அவதிப்பட்டு வரும் இந்திய மக்களுக்காக செய்யும் உதவிகள் மூலம் தற்போது நிஜ உலகின் ஹீரோவாக பார்க்கப்பட்டு வருகிறார். அது மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்படும் இயற்கை ஆபத்துகளின் போது பல்வேறு உதவிகளை தன்னால் இயன்றவரை செய்து வரும் அவருக்கு அனைவரது மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

sonu 1

இருப்பினும் தனது பணியை ஓய்வில்லாமல் செய்து வரும் அவர் தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிப்பவர்களுக்கும், மருத்துவ உபகரணங்கள் உபகரணங்கள் இன்றி அவதிப்படுபவர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் தனது பவுண்டேசன் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி அனைவரிடமும் இருந்து பெரும் நிதி மற்றும் பொருட்கள் ஆகிய அனைத்தையும் வைத்து தனது அமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் கொண்டு சென்று சேர்க்கும் தனது சேவையை தொடர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர் ஒருவர் அவரது அறக்கட்டளைக்கு தொடர்ந்து பண உதவி செய்து வருவதாக தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

karn

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் : சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சாளர் கர்ன் சர்மாவிற்கு எனது மனப்பூர்வ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பவுன்டேஷனுக்கு தொடர்ந்து நிதி அளித்து வரும் அவர் இளைஞர்களுக்கு நல்ல ஊக்கமாக திகழ்கிறார். தற்போது சமூக சேவை மூலமாகவும் அவர் முன்னுதாரணமாக மாறியுள்ளார் என தெரிவித்துள்ளார். அவரைப்பற்றி சோனு சூட் கருத்துக்களை பதிவிட்டாலும் அவர் எவ்வளவு தொகையை நிதியாக அளித்தார் என்ற தகவலை அவர் குறிப்பிடவில்லை.

- Advertisement -

இருப்பினும் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத கரண் ஷர்மா தொடர்ந்து நிதி உதவி அளித்து வருவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவரைப் போன்று இன்னும் சிலரும் முன்வந்து நிதி உதவி அளிக்குமாறும் ரசிகர்கள் இந்த பதிவினை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement