நான் உங்க அப்பா, தோனி வந்ததால் தப்பிச்சுட்டீங்க – 2015இல் விராட் கோலியை ஸ்லெட்ஜ் செய்தது பற்றி சோஹைல் கான் ஓப்பன்டாக்

VIrat Kohli Sohail Khan IND vs PAK
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக திகழும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆரம்பம் காலம் முதலே களத்தில் அனல் பறக்க மோதிக் கொள்வது வழக்கமாகும். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை போட்டியாக பார்க்காமல் கௌரவமாக கருதி ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் என்பதால் ஏதோ ஒரு தருணத்தில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஸ்லெட்ஜிங் போரில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாகும். அதனாலேயே இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அடிலெய்ட் நகரில் தம்மை ஸ்லெட்ஜிங் செய்த விராட் கோலிக்கு தகுந்த பதிலடி கொடுத்தது பற்றி பாகிஸ்தான் வீரர் சோஹைல் கான் தற்போது மனம் திறந்துள்ளார்.

உலக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலியின் அதிரடியான சதம் மற்றும் சுரேஷ் ரெய்னா 74, ஷிகர் தவான் 73 ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் 300/7 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சோஹைல் கான் 55 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதை துரத்திய பாகிஸ்தான் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களுக்குச் சுருண்டது.

- Advertisement -

உங்க அப்பா:
அதனால் 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தம்மிடம் வந்த விராட் கோலி நீங்கள் இப்போது வந்து விட்டு அதிகமாக பேசுகிறீர்கள் என்று ஸ்லெட்ஜிங் செய்ததாக சோஹைல் கான் கூறியுள்ளார். அதற்கு நீங்கள் அண்டர்-19 அளவில் விளையாடிய 2006லயே நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிதாக விராட் கோலிக்கு பதிலடி கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இடையே தோனி வந்து அவரிடம் வம்பிழுக்க வேண்டாம் என்று விராட் கோலி அழைத்துச் சென்று விட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “அந்த போட்டியின் ஒரு சமயத்தில் விராட் கோலி என்னிடம் வந்து “நீங்கள் இப்போது வந்து விட்டு அதிகமாக பேசுகிறீர்கள்” என்று கூறினார். ஆனால் நான் ஏற்கனவே 2006 – 07இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக விளையாடினேன். துரதிஷ்டவசமாக முழங்கால் காயத்தால் இடையே என்னால் நீண்ட காலம் விளையாடாமல் போனது. அதனால் அவரிடம் “மகனே நீ அண்டர்-19 இந்தியாவுக்காக விளையாடிய போது உனது அப்பா (நான்) டெஸ்ட் வீரராக விளையாடினார்” என்று பதிலடி கொடுத்தேன்”

- Advertisement -

“அது தான் அந்த சமயத்தில் நடைபெற்றது. மேலும் அந்த சமயத்தை நீங்கள் உற்றுப் பார்க்கும் போது மிஸ்பா-உல்-ஹக் அங்கே வந்து விராட் கோலி மீது கோபத்தை வெளிப்படுத்தி என்னை அமைதியாக இருக்குமாறு சொன்னார். அத்துடன் அங்கே வந்த எம்எஸ் தோனி “அமைதியாக வாருங்கள். அவர் நீண்ட காலமாக விளையாடுகிறார் அவரைப் பற்றி உங்களுக்கு தெரியாது” என்று விராட் கோலியிடம் சொல்லி அழைத்துச் சென்றார். இருப்பினும் இன்று நான் அவரை மிகவும் மதிக்கிறேன் ஏனெனில் அவர் மிகச்சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார்” என கூறினார்.

இதையும் படிங்க: IND vs AUS : அவர் வந்துட்டாரு இனிமேல் உங்களால் தப்பிக்கவே முடியாது, இதான் கடைசி சான்ஸ் – கேஎல் ராகுலை எச்சரிக்கும் முகமது கைப்

அதாவது 2006இல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது தெரியாமலேயே புதிதாக வந்தவர் என நினைத்துக் கொண்டு விராட் கோலி தம்மிடம் ஸ்லெட்ஜிங் செய்ததாக தெரிவிக்கும் சோஹைல் கான் அதற்கு ஹிந்தி மொழியில் மிகவும் பிரபலமான அப்பா – மகன் வார்த்தைகளை பிரயோகித்து பதிலடி கொடுத்ததாக கூறியுள்ளார். இருப்பினும் 9 டெஸ்ட், 13 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வரும் 51 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ள தம்மை விட நிறைய சாதனைகளை படைத்துள்ளது விராட் கோலியை மிகச் சிறந்த வீரர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

Advertisement