சம்பாரிச்சதெல்லாம் போதும். நீங்க எடுத்த முடிவு சரிதான் – ஐ.பி.எல் குறித்து நேரடியான கருத்தை வெளியிட்ட சோயிப் அக்தர்

Akhtar

கொரானாவின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாக பரவி இவ்வளவு மக்களை துன்பத்திற்கு ஆளாக்கி வரும் நிலையில் இந்த ஐபிஎல் தொடர் எல்லாம் தேவைதானா என்று எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியில் ஐபிஎல் தொடரை ஆரம்பித்தது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ. ஆனால் தொடரின் பாதியிலேயே வருண் சக்ரவர்த்தி, சாஹா போன்ற வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதியானதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தது பிசிசிஐ. இந்த முடிவை மனப்பூர்வமாக ஏற்கிறோம் என்று ஐபிஎல்லில் பங்கு பெற்றிருக்கும் அணிகளின் நிர்வாகங்களும், பல விளையாட்டு வீர்ர்களும் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்தும் முடிவை பசிசிஐ எடுத்துள்ளதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர். அந்த டிவிட்டர் பதிவில் அவர் கூறியதாவது, ஐபிஎல்லை பாதியில நிறுத்திய இந்த முடிவைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியா இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று நான் இரண்டு வாரங்களுக்கு முன்பே கூறியிருந்தேன். ஏனெனில் மக்கள் வெளியே உயிருக்காக போராடும் போது, விளையாட்டு ஒன்றும் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க கூடாது.

- Advertisement -

2008ஆம் ஆண்டிலிருந்தே ஐபிஎல் தொடரின் மூலம் பலர் பணம் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் இந்த ஒரு வருடம் ஐபிஎல்லை நிறுத்துவதால், அவர்களுக்கு அது ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்காது. இது நாம் எல்லோரும் ஒண்றினைந்து இந்தியாவிற்காக துணை நிற்க வேண்டிய காலகட்டமாகும். என்று அவர் பதிவிட்டிருக்கிறார். இந்த ட்வீட்டை அக்தர் போடுவதற்கு முன்னரே, ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்திருந்தார்.

அப்பேட்டியில், ஐபிஎல்லில் வீரர்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பயோ பபுளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதில் பேசிய அவர், பயோ பபுள் அத்தனை பாதுகாப்பாக இருக்காது. இதை நான் ஏன் கூறிகிறேனென்றால், ஏற்கனவே பாகிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் நாங்கள் ஏற்படுத்திய பயோ பபுள் கட்டுப்பாடு வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கவில்லை. அதை தாண்டியும் வீரர்களுக்கு கொரானா தாக்கியதால் அந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது, என்றி கூறியிருந்த அவர் மேலும்,

- Advertisement -

Gayle-1

இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமீரகத்தில் மட்டுமே பயோ பபுள் கட்டுப்பாடு பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். ஏனெனில் அந்த நாடுகளில் இருக்கும் சூழ்நிலைய வேறு. ஆனால் அதே கட்டுப்பாட்டை இங்கு நாம் பயன்படுத்துவது மிகவும் முட்டாள்தனமான ஒன்றாகத்தான் இருக்கும் என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

Advertisement