15 வருஷ கனவை பார்த்தேன்.. வீடியோ காலில் விராட் கோலி சொன்ன வாழ்த்து செய்தி பற்றி மந்தனா பேட்டி

Smriti Mandhana
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக வென்றுள்ளது. நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு மகளிர் ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது.

மேலும் ஆடவர் ஐபிஎல் தொடரில் 2008 முதல் 16 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் ஆர்சிபி திண்டாடி வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மகளிர் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளதால் தற்போது ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் நடந்துள்ளனர். முன்னதாக ஃபைனலில் டெல்லியை தோற்கடித்து கோப்பையை வென்றதும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உடனடியாக வீடியோ கால் செய்து மகளிர் ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

- Advertisement -

வீடியோ கால் வாழ்த்து:
இந்நிலையில் அந்த வீடியோ காலில் விராட் கோலி தெரிவித்த வாழ்த்து என்ன? என்று கேப்டன் ஸ்மிருதி மந்தனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மைதானத்தில் ரசிகர்களின் சத்தம் அதிகமாக இருந்ததால் விராட் கோலி என்ன சொன்னார் என்பதை தம்மால் கேட்க முடியவில்லை என்று மந்தனா பதிலளித்தார்.

ஆனால் 2008 முதல் ஆடவர் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் விராட் கோலியின் முகம் தங்களுடைய வெற்றியால் புன்னகையால் மலர்ந்ததை பார்த்ததாக மந்தனா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் சொன்ன எதையும் என்னால் கேட்க முடியவில்லை. ஏனெனில் சத்தம் அதிகமாக இருந்தது. அவர் தம்ஸப் செய்து வாழ்த்து தெரிவித்தார். அவரை விரைவில் சந்திப்பேன்”

- Advertisement -

“மிகவும் மகிழ்ச்சியாக காட்சியளித்த அவரிடம் பெரிய சிரிப்பு தெரிந்தது. கடந்த வருடம் அவர் எங்களுடைய அணி மீட்டிங்கில் வந்து பேசியது எனக்கும் அணிக்கும் உதவியாக இருந்தது. ஆர்சிபி அணியின் அங்கமாக அவர் கடந்த 15 வருடங்களாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். எனவே அவருடைய முகத்தில் அந்த மகிழ்ச்சியை நான் பார்த்தேன். ஆனால் சத்தத்தால் அவர் என்ன சொன்னார் என்பதை என்னால் கேட்க முடியவில்லை”

இதையும் படிங்க: பெண்களே ஜெயிச்சுட்டாங்க.. அந்த 2 பேர் மனசு வெச்சா ஆர்சிபி அணியும் ஜெயிக்கலாம்.. ஹர்பஜன் எதிர்பார்ப்பு

“இருப்பினும் பெங்களூருவுக்கு விரைவில் சென்ற பின் நான் பேசுவேன்” என்று கூறினார். அந்த வகையில் கிண்டல்களை உடைத்து மகளிர் அணி சாதனை படைத்துள்ளது ஆர்சிபி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே காரணத்தால் விரைவில் துவங்கும் ஐபிஎல் தொடரிலும் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையும் ஆர்சிபி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement