இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 13-ஆவது போட்டியானது நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ரன்களை குவித்தது.
2 உலக சாதனையை நிகழ்த்திய ஸ்ம்ரிதி மந்தனா :
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா 66 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 80 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதேபோன்று மற்றொரு துவக்க வீராங்கனையான பிரதிகா ராவல் 96 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 75 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
பின்னர் 331 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு 49 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 331 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. ஆஸதிரேலியா அணி சார்பாக அதிகபட்சமாக அலைசா ஹீலி 142 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் இந்திய மகளிர் அணியானது இந்த உலககோப்பை தொடரில் தங்களது 2 ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிக ரன்களை குவித்த வீராங்கனையான திகழ்ந்த ஸ்ம்ரிதி மந்தனா 2 புதிய உலக சாதனைகளை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
அந்த வகையில் ஸ்ம்ரிதி மந்தனா நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியில் அவர் அடித்த 80 ரன்களையும் சேர்த்து இந்த நடப்பு 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1000 ரன்களுக்கு மேல் அடித்து ஒரு ஆண்டில் 1000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் அடித்த முதல் சர்வதேச வீராங்கனையாக மந்தனா சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : அதான் என் வாழ்க்கையின் டர்னிங் பாய்ண்ட்.. அங்க சாதிக்கலன்னா 2023லேயே கேரியரை முடிச்சுருப்பாங்க.. சாம்சன் பேட்டி
அதோடு ஒருநாள் போட்டிகளில் 112 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 சதம் மற்றும் 33 அரைசதம் என 47.4 ரன்கள் சராசரியுடன் 5022 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களை அடித்த வீராங்கனை மற்றும் மிக இளம் வயதில் 5000 ரன்களை பூர்த்தி செய்த வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



