அதான் என் வாழ்க்கையின் டர்னிங் பாய்ண்ட்.. அங்க சாதிக்கலன்னா 2023லேயே கேரியரை முடிச்சுருப்பாங்க.. சாம்சன் பேட்டி

Sanju Samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டது பல ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்படாததும் நிறைய ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்தது.

அதில் சஞ்சு சாம்சன் கடைசியாக 2023ஆம் ஆண்டு தென்னாபிரிக்க மண்ணில் ஒருநாள் போட்டியில் விளையாடினார். அப்போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் தம்முடைய முதல் சதத்தை அடித்த அவர் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். ஆனால் அப்போதிலிருந்து இதுவரை சுமார் 2 வருடங்களாகியும் அவருக்கு அடுத்த ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

டர்னிங் பாய்ண்ட்:

இந்நிலையில் இவ்வுலகில் திறமையை நிரூபிக்காத வரை யாரும் உங்களை சிறந்தவர் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று சாம்சன் கூறியுள்ளார். அந்த வகையில் 2023இல் தென்னாப்பிரிக்க மண்ணில் சதமடித்தது தம்முடைய கேரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் சவாலான தென்னாப்பிரிக்காவில் திறமையை நிரூபித்தும் தமக்கு ஆஸ்திரேலியாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர் மறைமுகமான ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி சாம்சன் பேசியது பின்வருமாறு. “தென்னாப்பிரிக்காவில் அடித்தது என்னுடைய முதல் சர்வதேச சதம் என்று நினைக்கிறேன். அதற்கு முன் நான் அணியில் உள்ளேயும் வெளியேயும் இருந்தேன். இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய இடத்தில் அசத்துவதற்கு நான் போதுமானவன் என்பது எனக்குள் தெரியும்”

- Advertisement -

சாம்சன் பெருமிதம்:

“ஆனால் நீங்கள் நிரூபிக்காத வரை உங்களை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த சதத்திற்கு பின் மக்கள் என்ன சொல்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய மனதிற்குள் “ஆம் சஞ்சு, நீ சர்வதேச அளவில் அசத்தியுள்ளாய்” என்று நான் நினைத்தேன். அந்த தருணம் எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தியது. அந்தத் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியில் ஒருவேளை நான் அசத்தத் தவறியிருந்தால் என்னை அணியிலிருந்து நீக்கியிருப்பார்கள்”

இதையும் படிங்க: ஜெய்ஸ்வாலை அடித்து விட்டு தவறை.. ஒப்புக்கொள்ள மறுத்த வெ.இ வீரருக்கு ஐசிசி 2 தண்டனை.. நடந்தது என்ன?

“அப்படிப்பட்ட சூழ்நிலையில் சவாலான சதத்தை அடித்ததால் நீ இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்போட்டிக்கு பின் ஐபிஎல் தொடரில் 500 – 600 ரன்களை அடித்த நான் 2024 டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வானேன். அப்படியே இந்தியாவுக்காக சில சதங்கள் அடித்தேன். எனவே அந்த சதம் என்னுடைய கேரியரின் திருப்புமுனை” என்று கூறினார்.

Advertisement