ஜெய்ஸ்வாலை அடித்து விட்டு தவறை.. ஒப்புக்கொள்ள மறுத்த வெ.இ வீரருக்கு ஐசிசி 2 தண்டனை.. நடந்தது என்ன?

Jayden Seals
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 518/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கேப்டன் சுப்மன் கில் 129*, சாய் சுதர்சன் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக 270 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா மீண்டும் பேட்டிங் செய்யுமாறு வெஸ்ட் இண்டீஸ்க்கு ஃபாலோ ஆன் கொடுத்தது.

- Advertisement -

ஜெய்ஸ்வாலை அடித்த சீல்ஸ்:

அதை அடுத்து விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் 3வது நாள் முடிவில் 173/2 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக அப்போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரிய சவாலைக் கொடுத்து சதத்தை அடித்து 173 ரன்கள் குவித்தார். அன்றைய நாளில் 29வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டேன் சீல்ஸ் வீசி முடித்தார்.

அப்போது விக்கெட் கிடைக்காத விரக்தியில் பந்தை எடுத்த அவர் வேண்டுமென்றே ஜெயஸ்வால் மேலே அடிப்பது போல் தூக்கி எறிந்தார். அந்தப் பந்து ஜெய்ஸ்வால் காலில் பட்டதால் நடுவர்கள் அவரை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் அந்த செய்கையின் வாயிலாக “ஒரு சர்வதேச போட்டியில் ஆபத்தான அல்லது பொருத்தமற்ற முறையில் பந்தை அருகில் இருக்கும் வீரர் மீது வீசினார்” என்ற ஐசிசி 2.9 விதிமுறையை சீல்ஸ் மீறினார்.

- Advertisement -

ஐசிசி 2 தண்டனை:

எனவே அவருக்குத் தகுந்த தண்டனை வழங்குமாறு ஐசிசிக்கு நடுவர்கள் பரிந்துரைத்தனர். பொதுவாக அது போன்ற வழக்குகளை வீரர்கள் ஏற்றுக்கொண்டு சம்பளத்தை அபராதமாக கட்டுவார்கள். ஆனால் அந்த இடத்தில் தம் மீது தவறில்லை என்று வாதிட்ட சீல்ஸ் நடுவர்களின் குற்றச்சாட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். குறிப்பாக ரன் அவுட் செய்வதற்காக மட்டுமே பந்தை எறிந்ததாக சீல்ஸ் மேல்முறையீடு செய்தார்.

இதையும் படிங்க: வருத்தமாக தான் இருக்கு.. ஆனா.. டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து – அபிமன்யூ ஈஸ்வரன் வெளிப்படை

அதை ஏற்றுக்கொண்ட நடுவர்கள் அந்தப் பந்தை ஒன்றுக்கு பலமுறை பல்வேறு கோணங்களில் சோதித்தனர். அப்போது வெள்ளைக்கோட்டுக்குள் இருந்த ஜெயஸ்வால் மேலே சீல்ஸ் பொருத்தமற்ற முறையில் பந்தை எறிந்தது தெளிவாக தெரிந்தது. அதனால் சீல்ஸ் லெவல் 1 விதிமுறையை மீறியதாக நடுவர்கள் மீண்டும் ஐசிசிக்கு பரிந்துரைத்தனர். அதை ஏற்றுக்கொண்ட சீல்ஸ்க்கு அதிகபட்சம் 50% போட்டி சம்பளம் மற்றும் 1 கருப்பு புள்ளியை தண்டனையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement