இந்தியாவை இந்திய மண்ணில் வச்சே செய்யனும். அப்போதான் என் ஆசை நிறைவேறும் – சவால் விட்ட ஆஸி வீரர்

Smith
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபகாலமாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மேலும், காலம் காலமாக இந்திய மண்ணில் அந்த அணி பெரிதாக சாதித்தது கிடையாது. மேலும் கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரை முதன்முறையாக வென்று வரலாறு படைத்தது. அதனால் இந்திய அணி தனது பலத்தை அங்கும் நிரூபித்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி மீது அழுத்தம் ஏற்பட்டது.

paine 2

- Advertisement -

கடந்த 2004ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற அளவில் வென்றதே தற்போதுவரை சாதனையாக இருக்கிறது. அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றது. அந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

அதற்கு பின்னர் சென்ற வருடம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சென்று முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது. இவ்வாறு இருக்கையில் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது தான் தனது அதிகபட்ச விளக்கு என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Smith

டெஸ்ட் தொடரை இந்திய மண்ணில் கைப்பற்றுவதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆஸ்திரேலிய வீரர்கள் கிரிக்கெட்டைப் பற்றி பேசும்போது ஆஷஸ் கோப்பை, உலககோப்பை தொடர் போன்றவற்றை தான் பெரிதாக பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால், தற்போது இந்திய அணி நம்பர் ஒன் அணியாக உள்ளது. இந்திய மண்ணில் நம்பர்-1 அணியை வீழ்த்துவது தான் மிகப்பெரியதாக நான் கருதுகிறேன்.

- Advertisement -

இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது மிகக்கடினம். ஆகவே அந்த அணியை அதன் மண்ணிலேயே வெல்வதுதான் எனது அதிகபட்ச இலக்கு என்று கூறியுள்ளார் ஸ்டீவன் ஸ்மித். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை கைப்பற்றிய போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஓராண்டு தடையில் இருந்த ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் அந்த தொடரில் விளையாடவில்லை.

Smith

அவர்கள் இருவரும் அணியில் விளையாடாததாலே இந்திய அணி வெற்றி பெற்றது என்ற ஒரு பேரும் உள்ளது. இதனால் தற்போது பலமாக உள்ள ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் முனைப்பில் இந்திய அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement