மைதானத்தில் எல்லா பகுதிகளுக்கும் இவரால் பந்துகளை விளாச முடிகிறது – ஸ்மித் புகழாரம்

Smith

ஐபிஎல் தொடரில் 50 வது லீக் போட்டியில் நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே. எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

KXIPvsRR

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கிரிஸ் கெயில் 63 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்சர் என 99 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தபடியாக ராகுல் 46 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி

17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 50 ரன்களும், சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 45 ரன்களும் குவித்தனர். இறுதி நேரத்தில் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 31 ரன்களையும், பட்லர் ஆட்டமிழக்காமல் 22 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Stokes

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் கூறுகையில் : இந்த தொடரின் மத்தியில் சிறப்பான வெற்றிகளைப் பெற்றோம். ஆனால் இப்போது கிடைத்திருக்கும் வெற்றி சரியான நேரத்தில் கிடைத்த வெற்றி என்று நினைக்கிறேன். இன்னும் சிறிது வேகம் தேவை நாங்கள் எங்கள் பேட்டிங் ஆர்டரில் பல மாற்று திட்டங்களை வைத்துள்ளோம். இன்றைய போட்டியில் பட்லர் ஐந்தாவதாக பேட்டிங் செய்ய வந்தார்.

- Advertisement -

ஆனால் கடந்த போட்டியில் அவர் இதையடுத்து சிறப்பாக விளையாடவில்லை. இருப்பினும் தற்போது அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளாக ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது ஆட்டம் அணிக்கு உத்வேகம் அளிக்கிறது. மைதானத்தில் பந்து செல்ல முடியாத பல பகுதிகளுக்கும் அவரால் பந்துகளை விரட்ட முடிகிறது. ஒரு மதிப்புமிக்க பிளேயர். அவரே உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்.

stokes 1

எப்பொழுதும் அனைத்து வீரர்களும் பேசிக்கொண்டே இருந்தால் அவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர முடியும். அதன்படி இன்றைய போட்டியில் வீரர்களிடம் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து பேசிக் கொண்டே இருந்தோம் அதன்படி வெற்றியும் கிடைத்தது இந்த வெற்றியைப் பெற்றது மகிழ்ச்சி என ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.