Steve Smith : இவரின் சுதந்திரமான ஆட்டமே எங்கள் அணியின் வெற்றிக்கு காரணம் – ஸ்மித் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 45ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ்

Smith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 45ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களையும், டேவிட் வார்னர் 37 ரன்களையும் குவித்தனர்.

இதனையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 48 ரன்களை அடித்தார். துவக்க வீரரான லிவிங்ஸ்டன் 44 ரன்களை அடித்தார்.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஸ்மித் கூறியதாவது : எங்களது சொந்த மைதானத்தில் வெற்றியுடன் முடித்து இருப்பது சிறப்பானதாகும். துவக்கத்தில் அதிரடியாக ரன்குவித்த சன் ரைசர்ஸ் வீரர்களை எங்களது அணி வீரர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தி ஆட்டத்தை திருப்பி கொண்டுவந்தனர். லிவிங்ஸ்டன் சுதந்திரமாக விளையாடி சிறப்பான துவக்கத்தை அளித்தார். பிறகு சாம்சன் அருமையாக முடித்து வைத்தார்.

Livingstone

இந்த தொடரின் பெங்களூரு போட்டிவரை நான் ஆடுவேன். அதன்பிறகு எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவார்கள் என்று ஸ்மித் கூறினார்.

Advertisement