RR vs MI : இவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. இவரே எங்களுக்கு வெற்றியை பெற்று தந்தார் – ஸ்மித் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 36 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை

Smith-2
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 36 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.

Smith

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. டிகாக் 47 பந்துகளை 65 ரன்களை அடித்தார், சூரியகுமார் யாதவ் 34 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் என்ற இலக்கினை நிர்ணயித்தது மும்பை அணி.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 59 ரன்களை அடித்தார், ரியான் 43 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Smith

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஸ்மித் கூறியதாவது : இந்த போட்டியில் நான் பங்களிப்பு அளித்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்த வெற்றி கொஞ்சம் கடினமாகவே வந்தது இருப்பினும் அருமையான வெற்றி அணிக்கு தேவையான நேரத்தில் 160 ரன்களுக்கு மேல் வெற்றி என்ற இலக்கினை எங்களது வீரர்கள் அருமையாக பெற்று தந்தனர். ரியல் பராக் சிறப்பாக ஆடினார். இந்த 17 வயதில் அவருடைய ஆட்டம் என்னை ரசிக்க வைத்தது.

Riyan

இந்திய அணியில் பெரிய எதிர்காலம் அவருக்கு உண்டு. நான் என்னுடைய 17 வயதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன் அதேபோன்று ஆடிவருகிறேன். அதேபோன்று பராக் சிறப்பாக பயமில்லா ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைப்பார் என்று ஸ்மித் கூறினார்.

Advertisement