இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த போட்டியிலும் இதுதான் நடக்கும் – ஸ்மித் ஆவேசம்

Smith
- Advertisement -

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் 211 ரன்கள் அடித்து தனது சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்தினார்.

Smith

- Advertisement -

அவரின் அபார ஆட்டத்தினால் ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவித்தது. இதே போன்று இரண்டாவது இன்னிங்சிலும் மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஸ்மித் மட்டும் 82 ரன்கள் அடித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பான வெற்றியை பெற்றது. ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு வெற்றி குறித்து பேசிய ஸ்மித் கூறியதாவது : மீண்டும் ஆஷஸ் கோப்பையை நாங்களே தக்கவைத்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இது ஒரு எதிர்பாராத நிகழ்வு 2013 ஆம் ஆண்டு விளையாடி அதைப்போல இந்த முறை விளையாட முடியவில்லை. இருந்தாலும் நாங்கள் மீண்டும் கோப்பையை தக்க வைத்து கொள்வதில் உறுதியாக உள்ளோம்.

Smith 1

முக்கிய கோப்பைகளை எனது மகிழ்ச்சி குறிப்புகளில் நான் வைத்துக்கொள்வேன். அந்தப் பதிவுகளில் இதுவும் ஒன்று. இந்தப் கோப்பை எனக்கு பெருமையான ஒன்றாகும். இந்த இன்றைய போட்டியை போல அடுத்து வரும் போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவோம், எங்கள் அணிக்கு பந்துவீச்சாளர்கள் பங்கு முக்கியமானது என்று ஸ்மித் கூறினார்.

Advertisement