என் வாழ்நாளின் மிகச்சிறந்த ஒருநாள் போட்டி என்றால் அது இந்த போட்டிதான் – ஸ்மித் பேட்டி

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவன் ஸ்மித் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அனைத்து வகையிலும் சரியான போட்டியை கொடுக்கும் வீரராக திகழ்ந்து வருகிறார்.

smith

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் ஸ்மித் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாகவே இதுவரை ஆடி வருகிறார். மேலும் இந்நிலையில் தற்போது தனது இத்தனை ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த போட்டி எது என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்மித் அதில் கீழ்வரும் போட்டியினை மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதி தோல்வி அடைந்தது. இதற்கு காரணம் அந்த அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தான். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது.

இதற்கு காரணம் 91 முதல் 105 ரன்கள் விளாசிய ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேற முக்கிய காரணமாக அமைந்தார். இதே தொடரில் தொடர்ச்சியாக ஐந்து முறை அரை சதம் விளாசினார். இந்தியாவிற்கு எதிராக சரியாக சதம் அடித்து அந்த அணியை கரை சேர்த்தார். இது குறித்து பேசிய ஸ்மித் :

- Advertisement -

அனேகமாக இதுதான் என்னுடைய சிறந்த ஒரு நாள் ஆட்டம் ஆகும். எனது சொந்த நாட்டில் என்னுடைய நண்பர்கள் குடும்பத்தினருக்கும் முன்னணியில் எனது நாட்டை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றேன். அதுவும் நடப்பு சாம்பியன் அணிக்கு எதிராக இந்த சதம் அடித்தேன் இதுதான் என்னுடைய சிறந்த ஒரு நாள் போட்டி என்று கூறியுள்ளார் ஸ்டீவன் ஸ்மித்.

Smith

மேலும் ஒருநாள் போட்டியை விட டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் வேற லெவலில் விளையாடிவருகிறார். டெஸ்ட் வடிவத்தில் கிட்டத்தட்ட கோலிக்கு நிகராக சதங்களையும், கோலியை விட சராசரியையும் ஸ்மித் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -