RCB vs RR : இப்போதுதான் எல்லாம் நன்றாக போகிறது. ஆனால், நான் செல்கிறேன் – ஸ்மித் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 49 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக 11.26 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு

Smith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 49 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக 11.26 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி தாமதமாக துவங்கியதால் போட்டி 20 ஓவர்களில் இருந்து 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை அடித்தது. கோலி 7 பந்துகளில் 25 ரன்களை குவித்தது. டிவில்லியர்ஸ் 4 பந்துகளில் 10 ரன்களை அடித்தார். ராஜஸ்தான் அணி சார்பாக ஷ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 63 ரன்கள் என்ற இலக்குடன் ஆட ஆரம்பித்த ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை குவித்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் முதல் அணியாக பெங்களூரு அணி தொடரில் இருந்து வெளியேறியது.

போட்டி முடிந்து ராஜஸ்தான் அணி குறித்து பேசிய ஸ்மித் கூறியதாவது : ராஜஸ்தான் அணியில் நான் இணைந்தபோது எங்கள் அணி வரிசையாக தோல்வியை கண்டு கொண்டிருந்தது. அதன் பின்னர் குறைந்த போட்டிகள் உள்ள நிலையில் நான் கேப்டன் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன். மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றோம். அந்த இரண்டு போட்டிகளிலும் எனது பங்களிப்பு இருந்தது எனக்கு மகிழ்ச்சி.

Smith 1

மேலும், தொடரின் இறுதி கட்டத்தில் இருக்கும்போது நான் அணியில் இருந்து விலக உள்ளேன். இருப்பினும் எங்களது அணி நிச்சயம் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தொடரில் இப்போது தான் அனைத்தும் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்த வேளையில் நான் செல்ல இருப்பது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என்று ஸ்மித் கூறினார்.

Advertisement