பந்து தாக்கியதில் இருந்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை – ஸ்மித் பேட்டி

Smith
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இரண்டாவது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

Archer

- Advertisement -

இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் 148 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பந்து ஸ்மித்தின் கழுத்துப் பகுதியைத் தாக்கியது. இதன் காரணமாக நிலைகுலைந்து கீழே விழுந்த ஸ்மித் சிறிது நேரம் கழித்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக மாற்று வீரர் இரண்டாவது இன்னிங்சை ஆடினார்.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்கு முன் ஸ்மித் தனது உடல்நிலை குறித்து கூறியதாவது : தற்போது அனைத்து விதமான சிகிச்சையும் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இரவு நேரங்களில் நான் நிறைய தூங்குவது கிடையாது. ஆனால் காயப்பட்ட அன்று இரவு முழுதும் நன்றாகத் தூங்கினேன்.

Smith

ஆனால் மறுநாள் காலை தலை பயங்கரமாக வலித்தது. மேலும் கழுத்துப் பகுதியில் கை வைத்தால் வலிக்கிறது. யார் என் கழுத்தில் தொட்டாலும் எனக்கு வலிக்கிறது. நான் இப்போது மருத்துவ குழுவின் நேரடி கண்காணிப்பில் உள்ளேன். காயத்தின் தன்மையை பொருத்தே என்னால் அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்பது தெரியும். இன்னும் எனக்கு கழுத்துப் பகுதியில் வலி இருப்பது உண்மைதான் என்று ஸ்மித் கூறினார்.

Advertisement