பேட்டிங் மட்டும் தான் எனக்கு தெரியும்னு நெனச்சீங்களா ? என்னால இதுவும் முடியும் தனது திறமையை நிரூபித்த ஸ்மித் – வீடியோ இதோ

Smith
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 5 ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி கடந்த 12ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 294 ரன்கள் குவித்தது.

Smith

- Advertisement -

அதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்கள் மட்டுமே குவித்தது. ஸ்மித் அதிகபட்சமாக 80 ரன்கள் குவித்தார். அதன்பிறகு இங்கிலாந்து அணி 69 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி துவங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் வோக்ஸ் கேட்சை ஸ்லிப் திசையில் நின்றிருந்த ஸ்மித் அபாரமாக டைவ் செய்து பிடித்தார். வோக்ஸ் அடித்த பந்து எட்ஜ் ஆகி செல்ல அதை இரண்டாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக காற்றில் பறந்து அதனை லாவகமாக செய்தார். இதோ அந்த வீடியோ :

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் மட்டுமல்ல பில்டிங்கில் நான் திறமையானவர் என்பதை ஸ்மித் நிரூபித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement