நான் பண்ண அதே தப்பை இவரும் பண்ணிட்டாரு. நிச்சயம் அதிலிருந்து மீள்வார் – ஸ்மித் ஆதரவு

Smith
- Advertisement -

ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கலஸ் பூரான் நகத்தினை வைத்து பந்தினை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு அவர் மீது விழுந்தது. மேலும் அந்த போட்டியின் அம்பயர்கள் இந்த விடயத்தை ஐ.சி.சி யின் பார்வைக்கும் கொண்டு சென்றனர்.

Pooran

- Advertisement -

அதற்கு முன் அவருடைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தது. மேலும் அவருக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்தது. இந்நிலையில் அதேபோன்று பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடைக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் திரும்பிய ஸ்மித் இந்த விடயம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் ஸ்மித் கூறியதாவது : ஒவ்வொருவரும் மாறுபட்டவர்கள் அதேபோல் ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் போர்டும் மாறுபட்டது. என்னை பொருத்தவரை நிக்கோலஸ் பூரான் மிக சிறந்த வீரர் அவருடன் சில போட்டிகளில் விளையாடி உள்ளேன். அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது இந்த தவறிலிருந்து அவர் பாடத்தை கற்றுக் கொண்டு மீண்டும் அணிக்கு திரும்புவார்.

pooran

மேலும் அவர் கண்டிப்பாக எதிர்காலத்தில் சிறப்பாக ஆடி இது போன்ற தவறுகள் ஈடுபடாமல் இருப்பார் என்று நான் நினைக்கிறேன். மேலும் இந்த தடை அவருக்கு தன்னைப்பற்றி அறிந்துகொள்ள நல்ல புரிதலை அளிக்கும் என்றும் அதிலிருந்து பலமாக திரும்புவார் என்றும் பூரானுக்கு ஆதரவாக பேட்டி அளித்தார் ஸ்டீவ் ஸ்மித்.

Advertisement