- Advertisement -
உலக கிரிக்கெட்

ஸ்டெயினின் வேகத்தில் தவறிய பந்து. டெட் பாலாக இருந்தாலும் வெளுத்து வாங்கும் ஸ்மித் – வைரல் வீடியோ

ஆஸ்திரேலிய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. பிறகு 197 ரன்கள் குவித்தார் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி அஷ்டன் அகர் பந்து வீச்சில் 89 ரன்களுக்கு சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகர் ஹாட்ரிக் விக்கெட் உட்பட 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த போட்டியில் ஸ்மித்தும் பிஞ்சும் அதிரடியாக விளையாடினார்கள். பின்ச் 27 பந்தில் 42 ரன்களையும், ஸ்மித் 32 பந்தில் 45 ரன்களை குவித்தனர். அதிலும் குறிப்பாக ஸ்டெயின் வீசிய மூன்றாவது ஒஓவரின் நான்காவது பந்து அவர் வீசுவதற்கு முன்பாக அவர் கையிலிருந்து தவறியது மேலும் அவர் கையை விட்டு நழுவி அந்த பந்து மைதானத்தில் இரண்டு முறை பிச்சை ஆனது ஆனால் அதை விடாமல் பார்த்த ஸ்மித் இறங்கிவந்து பவுண்டரிக்கு அனுப்பினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -
Published by