Virat Kohli : விராட் கோலி இப்படி செய்வார் என்று எதிர்பாக்கவில்லை – ஸ்டீவ் ஸ்மித்

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டியில் ரசிகர்கள் விராட் கோலிக்கு ஆதரவாகவும், ஆஸ்திரேலிய அணி வீரரான ஸ்மித்துக்கு எதிராகவும் கோஷங்களை மைதானத்தில் தொடர்ந்து

Kohli-Smith
- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டியில் ரசிகர்கள் விராட் கோலிக்கு ஆதரவாகவும், ஆஸ்திரேலிய அணி வீரரான ஸ்மித்துக்கு எதிராகவும் கோஷங்களை மைதானத்தில் தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

smith 2

- Advertisement -

இதனை கண்ட விராட் கோலி ஸ்மித்தை வசைபாட வேண்டாம் அவரை வரவேற்று கைதட்டுங்கள் என்று ரசிகர்கள் நோக்கி கேட்டுக்கொண்டார். இந்த விவகாரம் குறித்து தற்போது ஸ்மித் விராட் கோலி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஸ்மித் கூறியதாவது :

ரசிகர்கள் என்னைப் பற்றி வசைபாடுவதை நான் என் காதில் கேட்டுக் கொள்ளவில்லை ஏனெனில் நான் ஆட்டத்தின் முழு கவனத்தோடு இருந்தேன். ரசிகர்கள் என்ன கூறினாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை மேலும் அது என்னை பாதிக்காது என்று இருந்தேன். இருப்பினும் கோலி அதனை கவனித்து என்னை ஆதரிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். அவரின் இந்த செயலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

Smith-1

அவரின் இந்த செயலை நான் பெரிதும் வரவேற்கிறேன் மேலும் மைதானத்தில் அவர் அருமையாக நடந்து கொண்டார் என்று ஸ்மித் கூறினார். இதுகுறித்து கோலி ஏற்கனவே தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அவர் யாதெனில் : ஏதோ நடந்து விட்டது ஆனால் அவர் மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டார். பழைய கதைகளை கிளற வேண்டாம் அவரை சிறுமைபடுத்தக் கூடாது என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement