இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். மேலும் இந்த எண்ணம் எல்லாம் எனக்கு அன்றைய இரவில் வந்தது – ஸ்மித் வேதனை

Smith
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இங்கிலாந்து நாட்டில் தற்போது 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற இந்த தொடர் 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது.

Smith

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய அசுர வேகப்பந்தில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் அவர் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வரும் முன் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது :

ஆர்ச்சர் வீசிய அந்த பந்து பட்டதும் நான் கீழே விழுந்தேன். கீழே விழுந்ததும் எனக்கு ஒரு நிமிடம் பில் ஹுயுக்ஸ் ஞாபகத்துக்கு வந்தார். அவரும் இதேபோன்று கழுத்தில் இதே பகுதியில் அடிபட்டு உயிர் இழந்தவர். எனவே அவருடைய ஞாபகம் எனக்கு அப்போது ஒருநிமிடம் வந்து சென்றது கழுத்தில் பந்து தாக்கியதும் என்னுடைய மனநிலை வேறு விதத்தில் இருந்தது.

Smith

அதன் பிறகு நான் சற்று சுமாராகி வெளியேறினாலும் அன்று இரவு எனக்கு மிக மோசமான இரவாக அமைந்தது. பொதுவாக ஆறு பியர் குடித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று அவ்வளவு கடினமாக இருந்தது. மேலும் பில் ஹுயுக்ஸ் போன்று அந்த நினைவுகளை மறக்க எனக்கு சிறிது நாட்கள் ஆனது. தற்போது நான் நான்காவது கிரிக்கெட் போட்டியில் விளையாட தயாராகி வருகிறேன். கண்டிப்பாக நான்காவது டெஸ்ட் போட்டியில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகிறேன் என்று ஸ்மித் கூறினார்.

Advertisement