பேட்டிங் பண்றீங்களா ? இல்ல டேன்ஸ் ஆடுறீங்களா ? ஸ்மித்தை கலாய்த்த – இங்கிலாந்து மகளிர் வீரர்

Smith
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் குவித்துள்ளது.

aus

- Advertisement -

ஸ்மித் 40 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இன்றைய போட்டியில் ஆடிய விதத்தை இங்கிலாந்து அணியின் மகளிர் கிரிக்கெட் வீரர் அலெக்ஸாண்ட்ரா கலாய்த்து உள்ளார். அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்மித் ஆடும் வீடியோ ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் ஸ்மித் குறித்து பதிவிட்டதாவது : ஸ்டீவ் ஸ்மித் பந்துகளை அடிக்காமல் விடும் விதம் மிகவும் பொழுதுபோக்காகவும், வேடிக்கையாகவும் உள்ளது. இதுபோன்ற பேட்டிங்கை நான் நீண்ட வருடங்களாக பார்த்ததே கிடையாது என்பது போல பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ :

இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் சிலர் ஸ்மித் நீங்கள் பேட்டிங் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை நடனம் ஆடாமல் இருங்கள். பந்து போடும் போது உங்களுக்கு என்ன டேன்ஸ் வேண்டியிருக்கிறது என்பது போல தனது கருத்துக்களை அந்த வீடியோவிற்கு பதிவிட்டு அந்த வீடியோவை வைரல் ஆக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement