கோலியை விட ஸ்மித் எத்தனை புள்ளிகள் அதிகம் தெரியுமா ? – விவரம் இதோ

Smith
- Advertisement -

உலக அளவில் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்மித் ஆகியோர் சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரில் யார் சிறந்த வீரர் என்பதில் எப்போதும் கடும் போட்டி நிலவி வந்தது. இருவரும் சம அளவிலான பலத்துடன் இந்தாலும் விராட் கோலி ஒருநாள் போட்டிகளிலும், ஸ்மித் டெஸ்ட் போட்டிகளிலும் முன்னிலை பெற்று வந்தனர்.

smith

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஆண்டு ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைபெற்றதால் கோலி முதலிடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தடையில் இருந்து மீண்ட ஸ்மித் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 சதம் உட்பட 3 போட்டிகளில் 378 ரன்கள் குவித்து மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து தற்போது அவர் விராட் கோலியை விட ஒரு புள்ளிகள் அதிகம் எடுத்து டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கோலி 903 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement