பந்து என்ன இவ்வளவு பெருசா தெரியுது. பரவாயில்லை இதையும் அடிப்போம்

Smith-1
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மூன்றாவது போட்டியில் கலந்து கொள்ளாத ஸ்மித் மீண்டும் இந்த போட்டியில் களமிறங்கினார்.

இரண்டாவது போட்டியின்போது ஆர்ச்சர் வீசிய பந்தில் மூலம் பலமாக தாக்கப்பட்ட ஸ்மித் ஒரு ஆட்டம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி வார்னர் விக்கெட்டை விரைவில் இழக்க நான்காவது விக்கெட்டுக்கு ஸ்மித் களமிறங்கினார்.

- Advertisement -

நிதானமாக ஆடிய ஸ்மித் அரை சதம் கடந்து அசத்தினார். இந்நிலையில் போட்டியின் நடுவே காற்று பலமாக வீசியது. அதனால் ரசிகர்கள் இடையே இருந்த பீச் பால் ஒன்று மைதானத்தின் நடுவில் உருண்டு வந்தது. அதனை பேடல் ஸ்வீப் அடித்து விரட்டினார். அந்த பந்து பவுண்டரிக்கு சென்றதும் ரசிகர்கள் அவரின் இந்த செயலை கண்டு கைதட்டி ஆரவாரப்படுத்தினார்கள்.

Advertisement