பிராட்மேனின் 89 வருட சாதனையை முறியடிக்க ஸ்மித்துக்கு கிடைத்த வாய்ப்பு – விவரம் இதோ

Smith

இங்கிலாந்து நாட்டில் தற்போது ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது போட்டி தற்போது நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா செய்தால்போதும் தொடரை கைப்பற்றிவிடும்.

Smith 1

அதனால் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித் 5வது போட்டியில் பிராட்மேனின் 89 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு மிகப்பெரிய சாதனையை முறியடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த சாதனை விவரம் இதோ :

இதுவரை ஒரே ஆஷஸ் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பிராட்மேன் வைத்துள்ளார். அவர் 1930 ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் 974 ரன்களை குவித்துள்ளார். அந்த சாதனையை முறியடிக்க ஸ்மித்திற்கு இன்னும் 304 ரன்கள் தேவை. ஏனெனில் தற்போது நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் ஒரு இரட்டை சதம் மற்றும் 2 சதங்கள் உடன் 671 ரன்களை குவித்துள்ளார்.

Smith

எனவே மீண்டும் 304 ரன்களை ஸ்மித் 5வது போட்டியில் குவிக்கும் பட்சத்தில் பிராட்மேனின் சாதனையை முறியடித்து அவர் வரலாற்று சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.