RR vs SRH : அநியாயமா என் ஸ்மார்ட் போன் உன்னால போச்சே. ஜெய்தேவ் உனட்கட்டிடம்புலம்பிய ஸ்மித் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 45ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், வில்லியம்

Smith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 45ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களையும், டேவிட் வார்னர் 37 ரன்களையும் குவித்தனர்.

இதனையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 48 ரன்களை அடித்தார். துவக்க வீரரான லிவிங்ஸ்டன் 44 ரன்களை அடித்தார்.

போட்டி முடிந்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் ஆட்டநாயகன் உனட்கட்டிடம் பேட்டி ஒன்றினை எடுத்தார். அந்த பேட்டியில் ஜாலியாக பேசிய ஸ்மித் உன்னால்தான் எனக்கு வர இருந்த ஸ்மார்ட் போன் பறிபோனது என்று கூறினார். நேற்றைய போட்டியில் ஸ்மித் அற்புதமான கேட்ச் ஒன்றினை பிடித்தார். ஆனால், உனட்கட் 3 கேட்ச்களை பிடித்து அசத்தினார்.

Smith 1

சிறப்பாக கேட்ச் செய்ததற்காக உனட்கட்க்கு ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்பட்டது. அந்த பரிசு தனக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று கிண்டல் செய்தே ஸ்மித் அவ்வாறு ஜாலியாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement