சச்சின் சாதனையை கடந்து இரட்டைச்சதம் அடித்து அதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக விசித்திர சாதனை படைத்த – ஸ்மித்

Smith
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றியும், இங்கிலாந்து அணி ஒரு வெற்றி மற்றுமொரு டிரா என தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

Smith 1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரண்டாவது போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் காயமடைந்த ஸ்மித் நான்காவது போட்டியில் அணிக்குத் திரும்பினார். வார்னர் விரைவில் ஆட்டமிழக்க நான்காவது வீரராக ஸ்மித் களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்து பந்துவீச்சை அசாதாரணமாக எதிர்கொண்ட ஸ்மித் தனது 26வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஸ்மித் முறியடித்தார். அதாவது சச்சின் 136 இன்னிங்ஸ்களில் 26 சதங்களை அடித்திருந்தார். ஆனால் அதனை தற்போது ஸ்மித் 121 இன்னிங்ஸ்களில் தனது 26 வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார். மேலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் தனது தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

Smith

இதில் 310 பந்துகளில் 200 ரன்களை கடந்து அசத்தினார். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக அவர் விசித்திர சாதனையையும் படைத்துள்ளார். அது யாதெனில் அவர் அடித்த 3 இரட்டை சதங்களும் இங்கிலாந்து அணிக்காக எதிராக வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அவர் வெளியேறினார்.

Advertisement