டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கோலிக்கு வரவிருக்கும் ஆப்பு – விவரம் இதோ

kohli sad
- Advertisement -

ஐசிசியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலும் இந்திய அணியின் கேப்டன் கோலி 910 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

Kohli

- Advertisement -

இருப்பினும் அவரின் முதல் இடத்திற்கு தற்போது ஆபத்து வர இருக்கிறது. ஆம் டெஸ்ட் போட்டிகளில் 910 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் கோலிக்கு அடுத்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் 904 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். எனவே இவர்கள் இருவருக்கும் இடையே 6 புள்ளிகள் மட்டுமே வித்தியாசத்தில் உள்ளன.

அதனால் விரைவில் விராட் கோலியின் முதலிடத்தை ஸ்டீவ் ஸ்மித் தட்டி பறிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஒரு ஆண்டு தடைக்கு பிறகு மீண்டு வந்த ஸ்மித் இவ்வளவு புள்ளிகளுடன் இருப்பதால் விரைவில் அவர் கோலியினை கடந்து முதலிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அது சற்று தாமதமாகும் என்று தெரிகிறது.

Smith

ஏனெனில் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியின் போது ஆர்ச்சர் வீசிய பந்தில் பலமாக அடி வாங்கிய ஸ்மித் ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அதேவேளையில் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கும் பட்சத்தில் அவருடைய புள்ளிகள் உயரும் வாய்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement