ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், 12 மாதம் விளையாட தடை விதித்தது ஆஸ்திரேலியா !

smitth

தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்காக திட்டமிட்டு சேதப்படுத்திய விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உண்டான நிலையில் அணியின் கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் ஏற்கனவே இருவரும் பதவி விலகினர்.smith

மேலும் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஐசிசி கேமரூன் பேன்கிராப்ட்டிற்கு 75% அபராதமும், அணி கேப்டனான ஸ்டீவன் ஸ்மித்திற்கு 100% அபராதத்துடன் கூடிய ஒரு டெஸ்டில் விளையாடுவதற்கான தடையையும் விதித்தது.

இந்நிலையில் இந்த பிரச்சனையை மிகவும் சீரியஸாக எதிர்நோக்கியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பதை பற்றி யோசித்துவருவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.

smith3

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது.இதனால் இருவர் மீதும் வாழ்நாள் தடைவிதிக்கப்படுமா என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.