ஜெர்ஸி நம்பர் ஒன்னா இருப்பதை வெச்சு விராட் கோலியுடன் இதை செய்யாதீங்க.. ரசிகர்களுக்கு மந்தனா கோரிக்கை

Smriti Mandhana
- Advertisement -

நட்சத்திர வீரர் விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் துறையின் முதுகெலுமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் கிட்டத்தட்ட 50 பேட்டிங் சராசரியில் 26000+ ரன்கள் குவித்துள்ளார். அதே போல 80 சதங்களையும் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். மறுபுறம் ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணியின் முதுகெலும்பு வீராங்கனையாக செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம். துவக்க வீராங்கனையான அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட விராட் கோலி போலவே தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

ஒரே நம்பர்:
மேலும் விராட் கோலியை போலவே நிறைய சாதனைகளையும் படைத்துள்ள அவர் இந்திய மகளிர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். அதனால் அந்த இருவரையும் இந்திய ரசிகர்கள் ஒப்பிட்டு கொண்டாடுவது வழக்கமாகவும். சொல்லப்போனால் விராட் கோலியை போலவே ஸ்மிருதி மந்தனாவின் ஜெர்ஸி நம்பர் 18 ஆகும்.

அது போக ஐபிஎல் தொடரில் அந்த இருவருமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்கள். அதனால் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் கிங் என்றால் ஸ்மிரிதி மந்தனா குயின் என்று ரசிகர்கள் பாராட்டுவது வழக்கமாகும். இந்நிலையில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக செயல்படுவதாக மந்தனா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் தங்களுடைய ஜெர்ஸி நம்பர் ஒன்றாக இருப்பதால் விராட் கோலியுடன் தம்மை ரசிகர்கள் ஒப்பிடுவதாகவும் மந்தனா தெரிவித்துள்ளார். ஆனால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி மகத்தான வீரர். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் செய்துள்ள சாதனைகள் அற்புதமானது”

இதையும் படிங்க: அந்த வீடியோ எல்லாம் பழசு.. யாரும் நம்பாதீங்க.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வினோத் காம்பிளியின் நண்பர்

“ஆனால் நான் நம்பர் 18வது ஜெர்ஸியை அணிந்து விளையாடுகிறேன் என்பதற்காக அவருடன் ஒப்பிடாதீர்கள். அது போன்ற ஒப்பீடுகள் எனக்குப் பிடிக்காது” என்று கூறினார். முன்னதாக மகளிர் ஐபிஎல் தொடரில் இந்த வருடம் மந்தனா தலைமையில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. அதனால் விராட் கோலியையே மிஞ்சிய மந்தனா பெங்களூரு அணிக்கு முதலாவதாக ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்ததாக ரசிகர்கள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement