அந்த வீடியோ எல்லாம் பழசு.. யாரும் நம்பாதீங்க.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வினோத் காம்பிளியின் நண்பர்

Kambli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வினோத் காம்ப்ளி கடந்த 1991-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டி போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் என 2477 ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதம் மற்றும் 3 அரைசதம் என 1084 ரன்கள் குவித்துள்ளார். அவரது கரியரின் ஆரம்பத்தில் மிகச்சிறந்த வீரராகவும் திகழ்ந்துள்ளார்.

சச்சினின் நெருங்கிய நண்பரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அவரது தனிப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு அவரால் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் போனது.

- Advertisement -

சச்சின் ஒருபுறம் புகழின் உச்சத்தை தொட்ட போது வினோத் காம்ப்ளி மிகவும் ஏழ்மையான நிலைக்கும் தள்ளப்பட்டார். அதோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அன்றாட வாழ்க்கைக்கு கஷ்டப்படுவதால் தனக்கு யாராவது வேலை கொடுத்து உதவுமாறும் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு மும்பையில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடமி பயிற்சியாளர் பதவியை வழங்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் வினோத் காம்ப்ளி உடல்நிலை மோசமாக இருப்பது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக அவரால் நடக்க முடியாமல் தவழ்ந்து வரும்படியும், அவரை இரண்டு பேர் தாங்கி பிடித்து வருவது போன்றும் அந்த வீடியோ இருக்கின்றது.

- Advertisement -

அதனை கண்ட ரசிகர்கள் அவரின் உடல்நிலை குறித்து வருத்தங்களை தெரிவித்ததோடு அந்த வீடியோவையும் அதிகளவு பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் அவரது வீடியோ வைரலாகியது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் நன்றாக இருக்கிறேன். சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம். தற்போது கூட களத்தில் இறங்கி பேட்டிங் செய்யும் அளவிற்கு நான் உடற்பகுதியுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 2025 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக புதிய அணிக்கு கேப்டனாக செல்லவுள்ள ஹார்டிக் பாண்டியா – எந்த அணிக்கு தெரியுமா?

மேலும் இது குறித்து அவரது நண்பர் கூறியதாவது : நாங்கள் அவரை சந்தித்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் குணமடைந்து வருகிறார். அவர் உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. அந்த காணொளி பழையது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் வினோத் காம்ப்ளி தற்போது நலமுடன் இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.

Advertisement