இந்தியாவுல வருஷத்துக்கு 10 நடக்குது. ஆனா பாகிஸ்தானுக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா ?

- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. கருணரட்னே தலைமையிலான இலங்கை அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஒப்புக்கொண்டதை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.

pak vs sl

- Advertisement -

பாகிஸ்தான் மண்ணில் கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ளன கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் போட்டி இது என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சென்றிருந்த போது இலங்கை அணி வீரர்கள் பயணித்த பேருந்து மற்றும் மீது பாகிஸ்தான் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த கொடூர சம்பவத்தில் இலங்கை வீரர்கள் காயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் எந்த ஒரு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தன. மேலும் குறுகிய கால தொடர்கள் அங்கு நடந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க எந்த அணியும் பாகிஸ்தான் செல்லவில்லை.

sl 1

இரு அணிகளுக்கும் பொதுவான இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சில போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கை அணி தைரியமாக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இந்த முறை அசம்பாவிதம் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி கூறியதாவது : இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க போட்டி இந்த டெஸ்ட் தொடரை நினைத்து எங்கள் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

sl

ஏனெனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்த மைதானத்தில் நாங்கள் விளையாட இருக்கிறோம். எனவே இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றுவோம் என்று கூறினார். மேலும் இந்த தொடரை நாங்கள் கைப்பற்றினால் தான் இழந்த எங்களது ரசிகர்களின் நம்பிக்கையை திரும்பப் பெற முடியும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் இரு அணிகளுக்கு புள்ளிப்பட்டியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Advertisement