
இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி ஃகால் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆனால் கடந்தப் போட்டியை போலவே சுமாராக விளையாடிய அந்த அணியை சிறப்பாக பவுலிங் செய்த ஆஸ்திரேலியா 257 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக தினேஷ் சந்திமல் 74, குசால் மெண்டிஸ் 85 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நேதன் 3, மிட்சேல் ஸ்டார்க் 3, மேத்தியூ குனேமான் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 21, உஸ்மான் கவாஜா 36, மார்னஸ் லபுஸ்ஷேன் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதத்தை அடித்து 131 ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சதத்தை அடித்தும் ஓயாமல் 156 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய மண்ணில் 150க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றை அவர் படைத்தார். இதற்கு முன் 2004 இலங்கையின் கண்டி, 2006 பாகிஸ்தானின் படுல்லாஹ் டெஸ்ட் போட்டியில் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தலா 144 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அவர்களுடைய சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்தது.
இலங்கைக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக களமிறங்கிய இலங்கைக்கு நிஷாங்கா 8, தனது கடைசி மற்றும் 100வது போட்டியில் கருணரத்னே 14, தினேஷ் சந்திமல் 12, கமிண்டு மெண்டிஸ் 14, கேப்டன் சில்வா 23, ரமேஷ் மெண்டிஸ் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் மூன்றாவது நாள் முடிவில் 211-3 ரன்கள் எடுத்துள்ள இலங்கை வெறும் 54 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும்.. 3 செமி ஃபைனல், ஃபைனல் அணிகளை கணித்த அக்தர்
அதன் காரணமாக இந்தப் போட்டியில் அந்த அணி இன்னிங்ஸ் அவமானத் தோல்வியை தவிர்த்துள்ளது. களத்தில் குசல் மெண்டிஸ் 48* ரன்களுடன் போராடி வருகிறார். மறுபுறம் 2 – 0 (2) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் செய்து இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.