எவ்வளவு தான் அடிப்பீங்க ! 32 வருடங்களுக்கு பின் இலங்கைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – பாவம் அவங்க

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இலங்கை பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. மொகாலியில் துவங்கிய இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்து 1 – 0* என ஏற்கனவே தொடரை இழந்த இலங்கை இப்போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது. மார்ச் 12ஆம் தேதியன்று பெங்களூருவில் பகலிரவு போட்டியாக துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதை அடுத்து களமிறங்கிய டாப் இந்திய வீரர்களை தனது அபார பந்துவீச்சால் கட்டுப்படுத்திய இலங்கை வீரர்கள் பெரிய ரன்களை அடிக்க விடாமல் அடுத்தடுத்து அவுட் செய்தனர்.

INDvsSL

- Advertisement -

இந்தியா 252 ரன்கள்:
இதனால் 86/4 என சுமாரான தொடக்கத்தை பெற்ற இந்தியாவை 6-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ரன்களை குவித்து மீட்டெடுத்தார். குறிப்பாக போட்டி நடந்த பெங்களூரு பிட்ச்சில் பந்து தாறுமாறாக சுழன்றதால் இதர இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இவர் மட்டும் வேறு ஏதோ மைதானத்தில் விளையாடுவது போல இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடினார்.

தொடர்ந்து அதிரடி சரவெடியாக ரன்களை விளாசிய அவர் 98 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 92 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். மறுபுறம் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 252 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை சார்பில் எம்புல்தெனியா மற்றும் ஜெயா விக்ரம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

shreyas iyer 3

இலங்கை 109க்கு ஆல் அவுட்:
இதை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு முதல் போட்டியில் சவால் கொடுத்த ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தான் தொல்லை கொடுப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் பிங்க் நிற பந்தை கையில் எடுத்து இலங்கையை தெறிக்கவிட்ட இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அந்த அணியின் முக்கிய வீரர்களை அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் செய்தார்.

- Advertisement -

அவருடன் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் கை கோர்த்து அபாரமாக பந்து வீசியதால் அதற்கு தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிக பட்சமாக நட்சத்திர அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து சொந்த மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட் ஹால் எடுத்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கைக்கு எதிராக மிகச்சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் (5/24) என்ற புதிய சாதனையையும் படைத்தார்.

Bumrah

எவ்ளோதான் அடிப்பீங்க:
இதை அடுத்து 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா தனது 2-வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முன்னதாக இப்போட்டியின் முதல் இன்னிங்சில் வெறும் 109 ரன்களுக்கு சுருண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக தனது 2-வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த பரிதாபத்திற்கு உள்ளானது. சொல்லப்போனால் 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை பதிவு செய்யும் மிகக் குறைந்தப்பட்ச டெஸ்ட் ஸ்கோர் இதுவாகும். அத்துடன் பின்க் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக மிகக் குறைந்த ஸ்கோரை இலங்கை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை பதிவு செய்த மிகக்குறைந்த ஸ்கோர் விவரஙகள்:
1) 82 க்கு ஆல்-அவுட், சண்டிகர், 1990.
2) 109 க்கு ஆல்-அவுட், பெங்களூரு, 2022*
3) 119 க்கு ஆல்-அவுட், அஹமதாபாத், 1994.
4) 134 க்கு ஆல்-அவுட், கொழும்பு, 2015.
5) 135 க்கு ஆல்-அவுட், பல்லகே, 2017.

Nissanka

மொத்தத்தில் கடந்த 32 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மோசமான சாதனையை படைத்ததால் இலங்கை அணி ரசிகர்கள் மிகவும் சோகமாக காணப்படுகிறார்கள். அத்துடன் இந்த தொடரின் முதல் போட்டியில் ஏற்கனவே இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்த அந்த அணி பெங்களூருவில் நடைபெற்று வரும் 2-வது போட்டியிலும் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நான்கரை ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கல், சோகத்தில் விராட் கோலியின் ரசிகர்கள் – என்ன நடந்தது?

இதற்கு முன்பாக நடந்த டி20 தொடரிலும் இலங்கையை சரமாரியாக அடித்த இந்தியா தற்போது டெஸ்ட் தொடரிலும் அடித்து வருகிறது. இதைப் பார்க்கும் அந்த அணி ரசிகர்கள் தரமான வீரர்கள் இல்லாத எங்கள் அணியை சொந்த மண்ணில் வைத்து “எவ்வளவு தான் அடிப்பீங்க” என்பதுபோல் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

Advertisement