2011 இறுதிப்போட்டியில் சூதாட்டம். போலீஸ் விசாரணைக்கு உத்தரவு – வெளியான ஷாக்கிங் உத்தரவு

2011-final
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சங்கக்காரா தலைமையிலான இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது அந்த தொடரின் இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக இலங்கை நாட்டின் முன்னாள் அமைச்சர் மஹிந்த குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. மேலும் அந்த இறுதிப் போட்டியில் விளையாடிய சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தனே ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

மேலும் இந்த குற்றச்சாட்டை கான ஆதாரத்தை காட்டுமாறு இவர்கள் இருவரும் பொங்கி எழுந்துள்ளார். இந்நிலையில் தான் கூறிய அந்தக் குற்றச்சாற்று குறித்து பதிலளித்துள்ள மஹிந்தா : 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியில் வீரர்கள் யாரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை. அவர்கள் ஏன் கோபப்பட வேண்டும்.

yuvidhoni

ஆனால் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டுள்ளார்கள் என்று உறுதியாகக் கூறியுள்ளார். ஏனெனில் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் அதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு கார் கம்பெனியை துவங்கினார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவு பணம் எப்படி வந்தது ? அதனால் நிச்சயம் அதில் சூதாட்டம் நடைபெற்று இருக்கும் என்று உறுதியாக கூறியுள்ளார்.

- Advertisement -

Sanga-1

இது குறித்து அதிகாரிகள் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சகம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த புகாரை ஏற்று அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டால் இது குறித்த உண்மை வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து இலங்கை அணி வீரர்களும் பி.சி.சி.ஐ எந்த ஒரு கேள்வியும் இதுவரை கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த சூதாட்ட புகார் தொடர்பாக இலங்கை விளையாட்டு அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கூறப்படும் இந்த சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சக செயலாளர் கூறுகையில் : சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு இந்த விசாரணையை நடத்துகிறது என்று கூறினார்.

Advertisement