2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை சூதாட்டம். சங்கக்காராவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் – புதிதாக ஏற்பட்ட சிக்கல்

Sanga
- Advertisement -

2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கினை கம்பீர் மற்றும் தோனி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை 28 ஆண்டுகள் கழித்து கைப்பற்றியது.

- Advertisement -

இந்நிலையில், இந்த போட்டியில் இலங்கை வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால்தான் இலங்கை அணி இந்த போட்டியில் தோல்வியடைந்து உலக கோப்பை தொடரை கைவிட்டது என்று அந்த நாட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பரபரப்பாக பேசி இருந்தார். இதன்காரணமாக அப்போது இலங்கை அணியின் கேப்டனாக இருந்த குமார் சங்ககாரா விளக்கம் அளிக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது அவருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

இதுகுறித்து பேசிய முன்னாள் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியதாவது : நாங்கள் இந்த உலகக் கோப்பையை காசுக்கு விற்றுவிட்டோம் என்றே தெரிகிறது. இறுதி ஆட்டத்தில் மேட்ச் பிக்சிங் செய்துள்ளார்கள். இல்லை என்றால் நாங்கள் கோப்பையை வென்று இருப்போம் இதில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது. ஆனால் சில குழுக்கள் இதில் ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.

Sangakkara

பின்னர் இதற்கு விளக்கம் அளித்த அப்போதைய கேப்டன் குமார் சங்ககாரா இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்நிலையில் குமார் சங்கக்காரவிற்கு நோட்டீஸ் அனுப்பியும், அந்த கால கட்டத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த அரவிந்த டீ சில்வாவிற்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

ஆனால் இந்த இறுதிப்போட்டியில் எந்தவித சூதாட்ட தொடர்பான செயலகளும் நடைபெறவில்லை என்று ஏற்கனவே அப்போதையை கேப்டன் சங்கக்காரா மற்றும் துணைக்கேப்டன் ஜெயவர்த்தனே கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதிப் போட்டியின்போது டாஸ் சுண்டுவதில் சர்ச்சை ஏற்பட்டு குமார் சங்ககாரா அடம்பிடிக்க இரண்டாவது டாஸ் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement