டி20 கிரிக்கெட்டிற்கு திரும்புகிறாரா மலிங்கா ? நிர்வாகம் வெளியிட்ட லேட்டஸ்ட் தகவல் – விவரம் இதோ

- Advertisement -

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா தனது அதிவேக யார்கரின் மூலம் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தவர். 2004ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் கேரியரை. துவங்கிய மலிங்கா தற்போது வரை உலகின் மிக அபாயகரமான பவுலராக திகழ்ந்து வருகிறார் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி விளையாடி வருகிறார்.

Malinga

- Advertisement -

மேலும் இலங்கை அணிக்காக அவர் விளையாடி சுமார் ஒரு வருட காலம் ஆகிய நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் அவர் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். மேலும் தான் டி20 கோப்பையில் விளையாட தயாராக இருப்பதாக மலிங்கா கூறியதால் இலங்கை அணி அவரை மீண்டும் அணியில் இணைக்குமா ? என்ற தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி தற்போது இலங்கை அணியின் தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள விக்ரமசிங்கே இதுகுறித்து கூறுகையில் : உலகளவில் டி20 போட்டிகளில் மலிங்கா ஒரு சிறந்த டி20 வீரர் என்பது நாம் அறிந்ததே. அவருடைய சேவை எப்போதும் இலங்கை அணிக்கு முக்கியமானது. ஆனால் அணியில் வீரர்களை தேர்வு செய்வதற்கு என்று ஒரு நடைமுறை இருக்கிறது.

malinga

அதன்படி நான் மலிங்காவை தொடர்பு கொண்டு இந்த டி20 உலகக் கோப்பையில் விளையாட உங்களிடம் நம்பிக்கை உள்ளதா ? என்று கேட்டேன். அதற்கு அவர் ஓராண்டாக நான் கிரிக்கெட் விளையாட வில்லை என்று தெரிவித்தார். மேலும் அவரிடம் நான் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் தான் தேசிய அணிக்கு தகுதி பெறமுடியும் என்று கூறினேன். இதை செய்தால் தான் உங்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்றும் ஆலோசனை கொடுத்தேன்.

Malinga

அதன் பிறகு அவர் எங்களுடைய தேர்வு கொள்கைகளை மதித்து அதற்கு உடன்படுவதாகவும் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். எனினும் அவர் விளையாடுவாரா ? விளையாடமாட்டாரா ? என்பது குறித்து என்னிடம் தெளிவாக எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று கூறினார். அதனால் மலிங்கா உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே அணியில் இடம் பிடிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement