ஹெராயின் கடத்திய இலங்கை கிரிக்கெட் வீரர். நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு – ஷாக்கிங் ரிப்போர்ட்

SL
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாக ஒழுக்கமற்று சென்றுகொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கணைகளை தேர்வு குழுவினர் படுக்கைக்கு அழைத்து அதற்குப் பதிலாக அணியில் தேர்வு செய்வோம் என்றெல்லாம் கூறி இருந்தனர். இதனை ஒருசில வீராங்கனைகள் நேரடியாக வெளியில் சொன்னதும் குறிப்பிடத்தக்கது.

Shehan

- Advertisement -

அதற்கு முன்னதாக ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் அந்த அணியின் துவக்க வீரர் திலகரத்னே தில்ஷன் ஜிம்பாப்வே சென்றிருந்தபோது அந்த நாட்டு பெண் ஒருவரை பலவந்தமாக கற்பழித்தார். இதுவும் அப்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. அது அதன் பின்னர் சமீபத்தில் முன்னாள் வீரர் ஜெயசூரியாவின் ‘அந்த மாதிரி’ வீடியோ ஒன்று வெளியானது.

இவ்வாறு சென்று கொண்டிருக்க இலங்கையின் 25 வயது இளம் வீரர் சினெகன் மதுசங்கா ஹெராயின் வைத்து மாட்டியிருக்கிறார். இலங்கையில் கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த சினெகன் மதுசங்காவை நிறுத்தி காவலர்கள் சோதனை செய்தனர்.

Shehan 1

அப்போது காருக்குள் ஹெராயின் என்ற போதை பொருள் இருந்தது. இதனையடுத்து காருக்குள் இருந்த 2 கிராம் ஹெராயின் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.இதனால் அவர் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் இரண்டு வார காலம் நீதிமன்ற காவலில் தற்போது வைக்கப்பட்டிருக்கிறார். சினெகன் மதுசங்கா 2018ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக அறிமுகமானார்.

முதல் ஒருநாள் போட்டியிலேயே ஹாட்ரிக் எடுத்து அசத்தியவர். தற்போதுவரை ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாற்றியதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்கு தற்காலிகமாக கிரிக்கெட் விளையாட இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement