ரோஹித் சொல்வதை கண்ணை மூடி கேட்டால் ஆட்டம் தானா வரும் – இளம்வீரர் புகழாரம்

MI
- Advertisement -

ஐபிஎல் தொடரில் இந்த வருடம் பல இளம் வீரர்கள் அதிக அளவில் சாதித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் இளம் பேட்ஸ்மேன்கள் பலர் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், சூரியகுமர் யாத்வ் போன்ற பல வீரர்கள் அடுத்து இந்தியாவிற்காக விளையாட தயாராகிவிட்டனர்.

- Advertisement -

ஏற்கனவே ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இந்திய அணியிலும் தற்போது ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருகின்றனர். சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமர் யாதவ் 44 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர்களை அதிரடியாக விளையாடி துவம்சம் செய்தார்.

குறிப்பாக சோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் வித்தியாசமாக திரும்பி அடித்து பிரமிக்க வைத்தார். அந்த பந்திற்கு முன்னதாக தான் அவர் வீசிய பவுன்சர் பந்தில் அடி வாங்கி இருந்தார் சூர்யகுமார் யாதவ் அவர் இது குறித்து பேசிய அவர் கூறியதாவது… எனது இந்த மாதிரியான ஆட்டத்திற்கு ரோகித் சர்மா தான் காரணம் அவர் என்ன சொன்னாலும் கண்மூடித்தனமாக நம்புகிறேன்.

SKY

அந்த பந்தில் அடி வாங்கிய போது ரோகித் சர்மா கூறியது தான் ஞாபகம் வந்தது. நம்பிக்கையுடன் ஆட வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு மேலும் எதிர்முனையில் இருந்த ஹர்திக் பாண்டியா விடம் சென்று அடுத்து அவர் என்ன பந்துவீச போகிறார் என்று கேட்டுக்கொண்டு நான் எனது ஆட்டத்தை ஆட தயார் ஆகினேன்.

Suryakumar1

அதன் பின்னர்தான் அந்த அற்புதமான ஷாட் அடிப்பேன் என்று கூறியுள்ளார் சூர்யகுமார் யாதவ்
இந்த ஆட்டத்தை பார்த்த முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் இவர் போன்ற வீரர்கள் கண்டிப்பாக இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement