எங்களிடம் இருந்த வெற்றியை அந்த இங்கிலாந்து வீரர் தான் பறிச்சாரு.. தோல்விக்கு பின் பேசிய – சூர்யகுமார் யாதவ்

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி நேற்று ராஜ்கோட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தோல்வியை சந்தித்தது அவரால் தான் :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெடுகளை 145 ரன்கள் மட்டுமே குவித்ததால் 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : இந்த போட்டியின் போது பனிப்பொழிவு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் நினைத்த அளவு பனிப்பொழிவு இல்லை.

- Advertisement -

அதேபோன்று ஹார்டிக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் போட்டி எங்களிடம் இருந்ததாகவே நினைத்தோம். ஆனால் ஆதில் ரஷீத் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்து விட்டார். அவர் ஒரு உலகத்தரமான பந்துவீச்சாளர் என்பது இதன் மூலம் தெரிந்துள்ளது.

இதையும் படிங்க : 10இல் 27.. 2 முறை 5 விக்கெட் ஹால்.. தனித்துவ சாதனையுடன் பரிதாப உலக சாதனை படைத்த வருண்

அதேபோன்று நமது அணியிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். இருந்தாலும் பேட்டிங் பொருத்தவரை நமக்கு இந்த போட்டியில் கிளிக் ஆகவில்லை. இது போன்ற தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் சிறப்பாக வருவோம் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement