10இல் 27.. 2 முறை 5 விக்கெட் ஹால்.. தனித்துவ சாதனையுடன் பரிதாப உலக சாதனை படைத்த வருண்

Varun chakravarthy 22
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ராஜ்கோட் நகரில் நேற்று நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 172 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51, லியம் லிவிங்ஸ்டன் 43 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே சுமாராக பேட்டிங் செய்து 20 ஓவரில் 145-9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை சந்தித்த இந்திய அணிக்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

போராடிய வருண்:

அத்துடன் இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பையும் இங்கிலாந்து தக்க வைத்துக் கொண்டது. அதன் காரணமாக இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடிய வருண் சக்கரவர்த்தி போராட்டம் வீணானது. கடந்த வங்கதேச தொடரில் மீண்டும் 3 வருடங்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாட வந்த அவர் கம்பேக் கொடுத்தது முதல் அபாரமாக பந்து வீசி வருகிறார்.

அப்போதிலிருந்து இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 27* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியான 10 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. வருண் சக்ரவர்த்தி: 27*
2. குல்தீப் யாதவ்: 25
3. அர்ஷ்தீப் சிங்/சஹால்: தலா 22

- Advertisement -

பரிதாப சாதனை:

இது போக சமீபத்தில் தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டி20 தொடரின் ஒரு போட்டியிலும் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அந்தப் போட்டியிலும் இதே போல இந்தியா தோல்வியை சந்தித்தது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 தோல்வியை சந்தித்த போட்டிகளில் தலா 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற பரிதாப உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இது தான் இயற்கை.. ஆட்டநாயகன் விருது வென்றாலும் இந்தியாவுக்காக இதுல முன்னேறி கம்பேக் கொடுப்போம்.. வருண் பேட்டி

இருப்பினும் அவருடைய இந்தப் போராட்டத்திற்கு ஆட்டநாயகன் விருது பரிசாக கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தத் தொடரின் 4வது போட்டி வரும் ஜனவரி 31ஆம் தேதி புனே நகரில் நடைபெற உள்ளது அந்தப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் நோக்கத்துடன் இந்திய அணி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement