சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்துள்ள வேளையில் அந்த மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.
இஷான் கிஷன் மற்றும் அக்சர் படேல் குறித்து பேசிய : சூரியகுமார் யாதவ்
அதோடு இந்த தொடரின் தற்போதைய நிலையில் பலமான முன்னிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது ஜனவரி 28-ஆம் தேதியான இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன் காரணமாக நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இன்றைய நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக இஷான் கிஷன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
இப்படி இந்த நான்காவது போட்டியில் இஷான் கிஷன் சேர்க்கப்படாதது ஏன்? அக்சர் பட்டேல் மீண்டும் அணிக்கு வராதது ஏன்? என்பது குறித்த சில கேள்விகளுக்கான பதிலை கேப்டன் சூரியகுமார் யாதவ் டாசின் போது தெரிவித்திருந்தார். அந்தவகையில் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது : கடந்த போட்டியில் விளையாடிய இஷான் கிஷான் தசைப்பிடிப்பை சந்தித்துள்ளதால் இந்த போட்டியில் அவர் விளையாடவில்லை.
இதையும் படிங்க : 7 பவுலிங் ஆப்ஷன்.. ஒரே ஒரு மாற்றம்.. 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணி இதுதான் – லிஸ்ட் இதோ
அதன் காரணமாகவே அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறார். அதேபோன்று அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய இன்னும் கொஞ்ச நேரம் தேவைப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த நான்காவது போட்டியை அவர் தவற விடுகிறார். நிச்சயம் ஐந்தாவது போட்டியில் அவரை பார்க்கலாம் என்றும் சூரியகுமார் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



