7 பவுலிங் ஆப்ஷன்.. ஒரே ஒரு மாற்றம்.. 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணி இதுதான் – லிஸ்ட் இதோ

IND vs NZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது ஜனவரி 28-ஆம் தேதியான இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

4 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் :

ஏற்கனவே இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் அனைத்து ஆட்டங்களிலும் அற்புதமாக விளையாடியிருந்த இந்திய அணியானது மூன்றிலும் வெற்றி பெற்று ஏற்கனவே இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக இன்றைய நான்காவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்துள்ள இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் வித்தியாசமான பிளேயிங் லெவனை அறிவித்துள்ளார். அந்த வகையில் இந்த போட்டியில் இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணிக்குள் வந்துள்ளார்.

கடந்த போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய் ஆகிய நான்கு முதன்மை பவுலர்கள் இருந்த வேளையில் தற்போது அர்ஷ்தீப் சிங் ஐந்தாவது பந்துவீச்சாளராக இணைந்துள்ளார். கூடுதலாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இருக்கின்றனர். அந்த வகையில் நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : உச்சத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா.. மீண்டும் டாப் 10-ல் வந்த சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

1) சஞ்சு சாம்சன், 2) அபிஷேக் சர்மா, 3) சூரியகுமார் யாதவ், 4) ரிங்கு சிங், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ஹர்ஷித் ராணா, 8) ரவி பிஷ்னாய், 9) குல்தீப் யாதவ், 10) அர்ஷ்தீப் சிங், 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

Advertisement