ரிங்கு சிங்கிற்கு முன்னதாக ரியான் பராக் களமிறங்கியது ஏன்? போட்டிக்கு பின்னர் – சூரியகுமார் யாதவ் அளித்த பதில்

Rinku-and-Parag
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 43 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 213 ரண்களை குவித்தது.

பின்னர் அடுத்ததாக விளையாடிய இலங்கை அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து இறுதி கட்டத்தை எட்டியபோதும் டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடும் ரிங்கு சிங் முன்கூட்டியே களம் இறக்கப்படாமல் அவருக்கு முன்னதாக ஆறாவது ரியான் பராக் 6-வது வீரராக களமிறங்கியது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

ஏனெனில் சமீப காலமாகவே டெத் ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர்களை பறக்க விடும் ரிங்கு சிங்கை இறுதி கட்ட ஓவர்களில் பயன்படுத்தாமல் ரியான் பராக்கை பயன்படுத்தியது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு போட்டி முடிந்த பின்னர் பதிலளித்த சூரியகுமார் யாதவ் கூறுகையில் :

- Advertisement -

வலது கை, இடது கை காம்பினேஷன் படி நேற்று பேட்டிங் ஆர்டர் களமிறக்கப்பட்டது. ஒரு இடது கை வீரர் ஆட்டம் இழந்தபோது மற்றொரு இடது கை வீரரும், ஒரு வலது கை வீரர் ஆட்டமிழந்த போது ஒரு வலது கை வீரரும் களமிறங்கினர். எது எப்படி இருப்பினும் அணியின் நன்மைக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்ததாக நினைக்கிறேன். அதன்படியே டேட்டிங் ஆர்டர் அமைந்ததாக கூறினார்.

இதையும் படிங்க : பேட்டிங்கில் விட்டாலும், பந்துவீச்சில் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றிய ரியான் பராக் – விவரம் இதோ

நேற்றைய போட்டியில் முதல் விக்கெட்டாக சுப்மன் கில் ஆட்டமிழந்தபோது சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். அதேபோன்று ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்ததும் ரிஷப் பண்ட் களமிறங்கினார். பின்னர் ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் என வலது கை ஆட்டக்காரர்களும் பின்னர் ரிங்கு சிங்கும் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement