இலங்கை அணிக்கு எதிராக நேற்று பல்லகல்லே நகரில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில முக்கிய மாற்றங்கள் நடைபெற்றன.
அந்த வகையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 பேட்ஸ்மேன்களுடனும், நான்கு பவுலர்களுடனும் களமிறங்கியது ஆச்சரியத்தை அளித்தது. ஹார்டிக் பாண்டியா ஆல்ரவுண்டராக நான்கு ஓவர்கள் வீசுவார் என்பதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் இந்திய அணியின் பந்துவீச்சு எவ்வாறு அமையப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் இருந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது ஹார்டிக் பாண்டியா தனது 4 ஓவர்களை முழுவதுமாக வீசியிருந்த வேளையில் கூடுதலாக ரியான் பராக்கும் 2 ஓவர்கள் வீசியது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 213 ரன்களை குவித்தாலும் அதில் ரியான் பராக் 6-வது வீரராக களம் புகுந்து 6 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 7 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றி இருந்தார்.
இப்படி பேட்டிங்கில் ஏமாற்றி இருந்தாலும் பந்துவீச்சில் அசத்திய அவர் 1.2 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இனிவரும் போட்டிகளில் அவருக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : வெறும் 69 போட்டிகளிலேயே விராட் கோலியின் மாபெரும் சாதனையை சமன் செய்த விராட் கோலி – விவரம் இதோ
ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் ஒரு முழுநேர பேட்ஸ்மேனுக்கு பகுதிநேர சுழற்பந்துவீச்சு தெரிந்திருந்தால் அவருக்கு கூடுதல் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அந்த வகையில் பார்க்கையில் தற்போது ஆறாவது வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ரியான் பராக் பந்துவீச்சில் கைகொடுப்பதால் அவர் தொடர்ந்து அணியில் இடம்பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.



